தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்து இருந்தாலும் இவரின் திரைவாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றுதான் “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி”. இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நதியா, அசின், விவேக், பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தில் உள்ள காமெடிகள் எல்லாம் தற்போது வரை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். மேலும் ஜெயம் ரவியின் திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்த இப்படத்தை குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் ஜெயம் ரவி ஒரு சூப்பரான தகவலை கொடுத்திருக்கிறார்.
அதாவது அந்த பேட்டியில் ஜெயம் ரவி “எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி” படத்தின் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது. அண்ணன் மோகன் ராஜா கதையை தயார் செய்துருக்கிறார். என்ற சூப்பர் தகவலை கூறியிருக்கிறார். இதன் மூலம் இப்படத்தின் பார்ட் 2 உருவாகுவதை ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 விற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க போவதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல்களை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
