தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். தற்போது பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் பிரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மும்பை மெட்ரோ ரயிலில் ஜவான் திரைப்படத்தின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Metro Train in Andheri, Mumbai is Jawan-fied by @GMModular ????♥️#ShahRukhKhan #Atleepic.twitter.com/QvrvJMq4Xh
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) August 20, 2023