jawan-movie-new-poster update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
தற்போது பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றிருந்தது.
அதன் பிறகு படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை முதலில் படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்த நிலையில் தற்போது படக்குழு தொடர்ந்து பல போஸ்டர்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு மிரட்டலான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…