ஜனநாயகன் 2வது சிங்கிள்: ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் ரிலீஸ்! லிரிக்ஸில் ஹெவியான அரசியல் வாடை
விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.
அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் கதைக்களமாக இருந்தாலும், தமிழுக்கேற்ப மாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ‘வெற்றி கொண்டான்’ என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் விஜய்.
இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் எழுதியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘ஒரு பேரே வரலாறு.. அந்தப் பேரைச் சொன்னால் அதிரும் ஊரு’ போன்ற வரிகள் விஜய்யின் மாஸ் அந்தஸ்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனைத் தொடந்து இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் கோலாலம்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தற்போது படக்குழுவினர் உள்ளனர்.


