jani dance master twitter post viral about rajinikanth
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். தமிழ், தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களின் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்து வரும் இவரது இயக்கத்தில் தமிழில் தனுஷின் பறக்க பறக்க துடிக்குதே பாடலும், விஜயின் ரஞ்சிதமே பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக தமன்னா மற்றும் ரஜினியின் ஆடலுடன் வெளியான “காவலா” பாடலுக்கும் நடன இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அனிருத் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்களால் தொடர்ந்து ரீல்ஸ் செய்யப்பட்டு இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்து வேற லெவலில் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் இப்பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், கிங் ஆஃப் ஸ்டைல் & ஸ்வாக் தலைவர் ரஜினிகாந்த் காரு என்று சொல்ல எனக்கு கிடைத்த ஒரே வார்த்தை பாக்கியம்தான். ஒரு கனவு நனவான தருணம். எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…