தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபிதியோல் ,பிரகாஷ்ராஜ், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ 75 கோடிக்கு விலை போனதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இந்த அளவிற்கு விலை போக வில்லை என்று சொல்லபடுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
