ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்துள்ளார்.
மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இது மட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று படகுழு அறிவித்து இருந்தது.
அந்த வகையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது வருகிற ஜூன் மாதம் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று முதல் பாடல் வெளியாகும் என்ற தகவல் சொல்லப்படுகிறது.
இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

jananayagan movie first single release update