ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த விழாவிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
அதாவது இசை வெளியீட்டு விழா நடங்கும் அரங்கத்திற்குள் கட்சி கொடி, துண்டு, உடை, பேட்ச் ,போன்ற அரசியல் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வர அனுமதி இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.இது மட்டுமில்லாமல் அதையும் மீறி பொருட்கள் கொண்டு வந்தால் அதனை பறிமுதல் செய்யப்படும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


