Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன் சென்சார் விவகாரம்.. உயர் நீதிமன்றம் கேட்ட கேள்வி.. வைரலாகும் தகவல்.!!

JanaNayagan Censor issue.. The question asked by the High Court.. Viral information.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்திருந்தது.

ஏற்கனவே இந்த படத்தை ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஏன் பத்தாம் தேதி வெளியிடக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்குமே என்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி ஆஷா கூறியுள்ளார்.

இதனால் படக்குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

JanaNayagan Censor issue.. The question asked by the High Court.. Viral information.!
JanaNayagan Censor issue.. The question asked by the High Court.. Viral information.!