தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வரும் இந்த திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாம், இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் 440 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வெகு விரைவில் 500 கோடியினை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
