தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள முதல் பாடலான ‘காவாலா’ என்னும் பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தை தற்போது வரை அதிர விட்டு வருகிறது.
இந்நிலையில் முதல் பாடலின் வரவேற்பை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “Hukum” என்ற பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக ரஜினியின் மிரட்டலான குரலில் கிளிம்ஸ் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
#Hukum ???? Idhu Tiger-in Kattalai#JailerSecondSingle is ready to fire on July 17th ????@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts… pic.twitter.com/5gqRMyXIcQ
— Sun Pictures (@sunpictures) July 13, 2023