கோலிவுட் திரை உலகில் பிரபலம் முன்னணி இயக்குனராக விளங்கும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்றைய முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. பலமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் அமோகமான வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வசூலை குவித்து வருகிறது.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் சென்னையில் உள்ள 500க்கும் மேற்பட்ட ராபிடோ ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அந்நிறுவனம் ஜெயிலர் படத்தை இலவசமாக திரையிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#Watch | சென்னையில் 500க்கும் மேற்பட்ட ராபிடோ ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 'ஜெயிலர்' படத்தை இலவசமாக திரையிட்டது அந்நிறுவனம்!#SunNews | #Jailer | #RapidoAutoDrivers pic.twitter.com/xLizft7HvT
— Sun News (@sunnewstamil) August 12, 2023