கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெய்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சிவா கூறியிருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதில் அவர், ஜெயிலர் படத்தில் ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் உள்ள கிளைமாக்ஸ் காட்சியை வேற லெவலில் எடுத்து இருக்கிறோம். இப்படம் நிச்சயமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். இப்படத்தை இயக்குனர் நெல்சன் அற்புதமாக எடுத்திருக்கிறார் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
#JAILER : Pakka Action Film⭐#StuntSiva : " #Nelson invited Me For 1st Day Of Shoot✨ #Rajinikanth Sir invited Me To His House❤️Movie Has Came Out Extraordinary????????Movie Will Be A Big Hit????Movie Has Big Action Sequence & Climax Will Be Next Level???????? "#Tamannaah | #Anirudh
— Saloon Kada Shanmugam (@saloon_kada) April 21, 2023