Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தின் நியூ போஸ்டர் இணையத்தில் வைரல்

jailer-movie-latest-poster

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏராளமான பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லரும் வெளியாகி படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்றைய தினம் மோகன்லாலுடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு இருந்த படக்குழு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருப்பதை குறிப்பிட்டு கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டு அறிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.