jailer-movie-child-artist details
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து மேலும் சில நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு பேரனாக நடிக்க இருக்கும் சிறுவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்தில் யூடியூபில் ‘ரித்து ராக்ஸ்’ என்ற நகைச்சுவை சேனல் மூலம் பிரபலமான ரித்து என்கின்ற சிறுவன் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இச்சிறுவன் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் வெளியான O2 திரைப்படத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…