ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சந்தானம், பஹத்பாசல், தமன்னா, வித்யா பாலன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது நடிகர் ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்தில் கேமியோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.


