Tamilstar
Health

பெண்களுக்கு ஆரோக்கிய தோழியாக இருக்கு வெல்லம்..

Jaggery is a healthy friend for women

பெண்களின் ஆரோக்கியத்திற்கு வெல்லம் பெருமளவில் உதவுகிறது.

வெல்லம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது.

பெரும்பாலும் பெண்களுக்கு வரும் ரத்த சோகை பிரச்சனை வெல்லம் சாப்பிடுவதனால் தீரும். ஏனெனில் இதில் கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் வைட்டமின் பி12 பொட்டாசியம் போன்ற ஆரோக்கியம் தரும் சத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது.

வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கலந்து குடிக்கும் போது மாதவிடாய் காலங்களில் வரும் பலவீனத்திலிருந்து நாம் விடு பட முடியும்.

மேலும் முகப்பரு மற்றும் சரும பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கவும்,மற்றும் ஹார்மோன் சமநிலை படுத்தவும் வெல்லம் பெருமளவில் உதவுகிறது.

பெண்களுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுப்பதால் இது பெண்களின் தோழியாக கருதப்படுகிறது