Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ள விஜயின் மகன் சஞ்சய், வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி தளபதி விஜயின் மகன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த நிலையில் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் ஐஸ்வர்யா மற்றும் அதிதி சங்கர் ஆகியோருடன் தளபதி விஜய் மகன் ஜாக்சன் சஞ்சய் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு தீயாக பரவி வருகிறது.

Jackson Sanjay With Director Shankar Family photo