Isolated Sanam Shetty .... Is this the reason
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம்.
அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…