சிம்புவின் மாநாடு படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, தற்போது விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் பாரதிராஜா, மாநாடு படத்திற்கு தேதி ஒதுக்க முடியாததன் காரணமாக, அப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Vishwanath and Sons Trailer

Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…

1 day ago

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

1 day ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

2 days ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

2 days ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

2 days ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

2 days ago