திவ்யா மீது சான்ராவுக்கு இருந்த கோபத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்த தற்போது ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியு வருகிறார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிரஜின் சான்ட்ரா திவ்யா அமித் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த வாரம் நடந்த எவிட்ஷனில் சான்ட்ரா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் சான்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் ஏற்பட்டு இருந்தது தற்போது அதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
பிரஜனும் சாண்ட்ராவும் பேசிக்கொள்ளாமல் இருந்தபோது, பிரஜனிடமிருந்து தனக்குக் கிடைத்த கவனத்தை திவ்யா ரசித்தாள். ஆனால், தனியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் சென்று பேசுமாறு பிரஜனுக்கு அறிவுரை கூற அவள் மறந்துவிட்டாள்.
அங்குதான் திவ்யாவின் அடிப்படை குணங்களும் ஒழுக்கமும் தவறாக இருந்தன, அதுவே சாண்ட்ராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும் சான்ட்ரா எலிமினேஷன் ஆகி வெளியே வரும்போது திவ்யா கட்டிப்பிடிக்க போகும்போது சான்றா தடுத்து இருந்தது பேசும் பொருளாகவே மாறி இருந்தது என்று சொல்லலாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


