ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம்
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில சோகமான விஷயங்களை குறித்து பகிர்ந்து உள்ளார். அதாவது நான் சின்ன வயசுல இருக்கும்போதே எங்க அப்பா மறைஞ்சுட்டாங்க.. அதுக்கப்புறம் என்ன பாத்துகிட்ட பாட்டியும் மறைந்து விட்டார்கள்.நான் ஆசையா வளர்த்த நாய்க்குட்டியும் மறைஞ்சிடுச்சு. நான் நேசிச்சது எதுவுமே இப்போ இல்ல என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் என்னோட மனைவியும் என்னோட இல்ல வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை எனக்கு சின்ன வயசுலயே புரிஞ்சுகிட்டேன் என பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


