iravin-nizhal-movie-released-on-amazon-prime
‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தது.
இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற தகவலை நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சில காரணங்களால் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல் Please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள் (single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன். என்று பதிவிட்டிருக்கிறார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…