IPL player praises Yogi Babu
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டேலா’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.
தற்போது ‘மண்டேலா’ படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். வீடியோ கால் மூலமாக யோகி பாபுவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் ‘மண்டேலா’ திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்”.
இவ்வாறு ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி…