Injured Arya pretending not to dope in a fight scene
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார்.
தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…