Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கும்”: இந்திரஜா ரோபோ சங்கர் பேச்சால் குவியும் வாழ்த்து

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

அப்படி வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் கடந்த வாரம் தொடங்கியது.

இதில் போட்டியாளர்களின் ஒரு ஜோடியாக பங்கேற்று உள்ளனர் இந்திரஜா மற்றும் அவரது கணவர். நடுவராக பங்கேற்று வரும் ராதா இந்திரஜாவிடம் குழந்தை இப்போது என கேள்வி எழுப்பினார்.

உடனே இந்திரஜா எங்க ரெண்டு பேர் வீட்டில் இருந்து நாங்க ஒரு ஒரு குழந்தை தான். ஆகையால் இரண்டு குடும்பமும் எங்களது குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை எடுத்து இந்திரஜாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Indraja robo Shankar about baby planning
Indraja robo Shankar about baby planning