சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருது பெயரில் மாற்றம். வைரலாகும் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக விருது வழங்குவது தள்ளிப்போனது.இந்த ஆண்டு 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது இந்திரா காந்தி பெயரிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான விருது நர்கிஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த இரண்டு விருதுகளும் அவர்களது பெயரில் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது \”இயக்குனருக்கான சிறந்த அறிமுக படம்\” என்ற பெயரில் வழங்கப்படும்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான நர்கிஸ் தத் விருது தேசிய சமூக மற்றும் சுற்றுசூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பெரும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பரிசுத்தொகையை பங்கிட்டு கொள்வார்கள். இனிமேல் இயக்குனருக்கு மட்டுமே இந்த பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூகப் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது அது ஒரே விருதாக வழங்கப்பட இருக்கிறது.

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை பெறும் நபருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அது 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டு சிறந்த ஏவிஜி (animation, visual effects, gaming and comics) சினிமா பெயரில் வழங்கப்பட இருக்கிறது.”,

indira-gandhi-nargis-dutt-names-dropped-from-categories-other-changes
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago