Indian 2 shooting starts without Kamal
இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். அதன்பிறகு கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு முடங்கியது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது. இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாக பேசப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
கமல்ஹாசன் இல்லாமல் படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். தேர்தல் பணிகள் முடிந்ததும் தனது காட்சிகளை ஒரேகட்டமாக நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala
Diesel Official Trailer | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Rajini Gang Official Teaser | Rajini Kishen | Dwiwika | M.Ramesh Baarathi | Mishri Enterprises
Ram Abdullah Antony Trailer | Poovaiyar | Sai Dheena, Soundararaja | T.R.Krishna Chetan | Jayavel