இந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் எப்போதும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் குழுவுடன் சிரித்தபடி கலந்துரையாடும் நடிகர் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
#Ulaganayagan @ikamalhaasan with #Indian2 Action design team..#BulletActionDesign pic.twitter.com/pQScPagTuQ
— Ramesh Bala (@rameshlaus) March 9, 2023