Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் லுக்கில் கமல்ஹாசன்

indian 2 movie new look kamalhaasan photos viral

கோலிவுட் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் கிளீன் ஷேவ் செய்து நியூ லுக்கில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்