Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் மந்தமாக இருக்கும் இந்தியன் 2, அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டதால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விமர்சனங்களால் எடிட் செய்து படத்தின் நேரத்தை குறைத்தனர். ஆனால் அதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை.

தற்போது வரை இந்த திரைப்படம் 60 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியன் 2-வை பெரிய அளவில் நம்பி இருந்த லைக்கா நிறுவனம் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Indian 2 movie latest update viral
Indian 2 movie latest update viral