தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக விக்ரம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த சமயத்தில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் நாளை ( ஜூன் 24 ) வெளியாகலாம் என நம்பர் தகுந்த வட்டாரங்கள் உள்ளது தகவல்கள் கிடைத்துள்ளன. இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…