Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பில் இணைந்த பிரபலம்.வைரலாகும் புகைப்படம்

indian-2-movie-character-update

கோலிவுட் திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய் வானில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் ஷங்கருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் காளிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.