‘இந்தியன் 2’ விவகாரம்… லைகா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றது ஐகோர்ட்டு

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ‌ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ‌ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வக்கீல், லைகா மற்றும் ‌ஷங்கர் தரப்பில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் பேச்சுவார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்று ‌ஷங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Suresh

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

7 hours ago

ஸ்டைலிஷ் உடையில் சமந்தா, போட்டோஸ் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…

14 hours ago

வடசென்னை 2: தனுஷ் சொன்ன தகவல்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

14 hours ago

டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

14 hours ago

முத்து விரித்த வலை,சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…

16 hours ago

சிங்காரம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

17 hours ago