வருமான வரிக்கு வட்டி விலக்கு விவகாரம் – சூர்யா தரப்பில் விளக்கம்

நடிகர் சூர்யா வீட்டில் 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் 2007-08, 2008-09 ஆகிய ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து, கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதில் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சூர்யாவுக்கு அறிவுறுத்தியது.

இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வருமான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டுமென வருமான வரி தீர்ப்பாயத்திலும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று (17.08.2021) விசாரனைக்கு வந்ததில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு பற்றி சூர்யா தரப்பு சார்பில் ராஜ்சேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதில் வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இன்றைய நாள் வரை நாங்கள் எந்த வரி பாக்கியும் வைக்கவில்லை, வழக்கானது வருமான வரிக்கான வட்டியை திரும்ப பெறுவதற்கானது மட்டுமே. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.

Suresh

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

9 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

14 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

14 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

14 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

15 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

15 hours ago