இந்நிலையில் சூர்யா 46 திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது !

இந்நிலையில் சூர்யா 46 திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது !

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். ஆன்மீகம் கலந்த ஜானரில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் தலைப்புடன் கூடிய டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

நாகவம்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரவீனா டண்டன், மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்பட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். முழுக்க குடும்பப் பின்னணியில் உருவாகும் படமாக இதனை வடிவமைத்துள்ளார் வெங்கி அட்லுரி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

‘கருப்பு’ படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகளை வைத்து, வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ‘சூர்யா 46’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

dinesh kumar

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

9 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

1 day ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

1 day ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

1 day ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

1 day ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

1 day ago