இளையராஜாவிற்கு எதிராக எழும் விமர்சனங்கள்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் சர்ச்சை கருத்து சமூக வலைத்தளத்தில் விவாதமானது இதற்கு மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் கூறுகையில், ”இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Ilayaraja’s controversial comment Mari Selvaraj expressed regret
jothika lakshu

Recent Posts

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…

6 hours ago

சூர்யா 46 : வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…

8 hours ago

லோகா: 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…

9 hours ago

விஜி சொன்ன வார்த்தை, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

10 hours ago

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

13 hours ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

13 hours ago