முகம் மற்றும் சரும பிரச்சனையை நீக்கி பொலிவாக வைத்துக் கொள்ள ஐஸ் கட்டி பெருமளவில் உதவுகிறது.
பொதுவாக அனைவரும் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பல சரும பராமரிப்பு பொருட்களை வாங்கியும் பெரியதாக பயன் கொடுப்பதில்லை. ஆனால் ஐஸ் கட்டி தடவுவதன் மூலம் நம் சருமம் மென்மையாக இருக்கும்.
முகத்தில் ஐஸ் கட்டி தடவும் போது முகம் இறுக்கமாக இருக்கும்.
அப்படி தேய்க்கும் போது இளமையாக தெரிவீர்கள். மேலும் சருமத்தில் ரத்த ஓட்டம் மேம்படுவதால் முகத்தின் சோர்வு மற்றும் சருமத்தின் நிறம் மேம்படும். இதனால் பிரகாசம் மற்றும் புத்துணர்ச்சியோடு முகம் பளபளப்பாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து தோளில் எரிச்சல் மற்றும் சிவப்பாக இருக்கும் இடத்தில் ஐஸ் மருந்தாக பயன்படுகிறது.
அந்த இடத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தும் போது சருமத்தின் சிவப்பிலிருந்து விடுபட பெருமளவில் உதவுகிறது.
முகத்தில் இருக்கும் முகப்பருவையும் வீக்கத்தையும் குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் மேலும் புதிய முகப்பருக்களை வரவிடாமல் தடுக்கிறது. பேஷியல் செய்யும்போது ஐஸ் பயன்படுத்தி செய்தால் சருமத்திற்கும் உடலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.