Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்

I was asked to play Neelambari in the film 'Padaiappa' Meena's memories

தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கிறது. படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

படையப்பா படம் முதல் முறையாக ரிலீஸானபோது, நீலாம்பரியின் திமிரை பார்த்து கடுப்பாகி அவரை திட்டியதுடன் ஸ்கிரீன் மீது செருப்பை வீசினார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என்னமா மிரட்டியிருக்கிறார் என பெருமையாகப் பேசி வருகிறார்கள்.

படையப்பா படம் ரிலீஸான அன்று சென்னையில் இருந்தால் பிரச்சினை வருமோ என நினைத்து ஹைதராபாத்தில் இருந்தார் ரம்யா கிருஷ்ணன். வாய்ப்பு கிடைத்தால் படையப்பாவின் மனைவியாக நடிக்க விரும்பியிருக்கிறார் அவர். ஆனால், அவரை நீலாம்பரியாக நடிக்க வைக்கவே விரும்பினார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். ரம்யா கிருஷ்ணனோ வசுந்தராவாக நடிக்க விரும்பியிருக்கிறார்.

ஆனால், மீனாவோ நீலாம்பரியாக நடிக்க ஆசைப்பட்டும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. வில்லி கதாபாத்திரத்திற்கு மீனா சரிப்பட்டு வர மாட்டார் என்று நினைத்து தான் நீ வேண்டாம்மா என்று கூறியிருக்கிறார் ரஜினி. நீ வேணும்னா வசுந்தராவாக நடியேன் என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் எனக்கு நீலாம்பரி கதாபாத்திரம் தான் வேண்டும் என விரும்பியிருக்கிறார் மீனா.

ஆனால், கதாபாத்திர மாற்றமே படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறது. தற்போதும் இப்படம் திரையரங்குகளில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.