Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

I want to act in a biopic of my father... Interview with Shanmuga Pandian after watching the film 'Kombu Seevi' with fans

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘படைத்தலைவன்’ படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்தது இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘கொம்புசீவி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில்,பேசிய சண்முகப் பாண்டியன், தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவர் பேசுகையில்,

‘அப்பாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆசை. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை சுலபமாகப் படமாக்க முடியாது’ என கூறியுள்ளார்.

இதேபோல், இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பதற்கு தனுஷ் திட்டமிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பான படப்பணிகள் தாமதமாகி வருகிறது.

I want to act in a biopic of my father... Interview with Shanmuga Pandian after watching the film 'Kombu Seevi' with fans
I want to act in a biopic of my father… Interview with Shanmuga Pandian after watching the film ‘Kombu Seevi’ with fans