விஜய் சேதுபதி இல்லாமல் படம் எடுக்க முயற்சி செய்தேன் – நலன் குமாரசாமி

சூது கவ்வும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார்.

இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் குறித்து நலன் குமாரசாமி கூறும்போது, ‘குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் உருவாக காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார்தான்.

இந்த படத்தில் 4 காதல் கதைகள். நான்குமே வித்தியாசமாக இருக்கும். நான் இந்த படத்திற்காக ஒரு நடிகையை பற்றி பேச விஜய் சேதுபதியிடம் சென்றேன். அப்போது, என்ன கதை என்கிட்ட சொல்லு என்றார். நானும் சொன்னேன். கதை கேட்டுவிட்டு நானே நடிக்கிறேன் என்றார்.

நானும் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை இயக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார் இயக்குனர் நலன் குமாரசாமி.

Suresh

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

6 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

6 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

22 hours ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

23 hours ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

23 hours ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

1 day ago