போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் – விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வெற்றிமாறன்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.

அப்போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது: கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது.

அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது. விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். உரிமைக்காக போராடுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம் என பதிவிட்டுள்ளார்.

Suresh

Recent Posts

பிரான்சில் குடும்பத்துடன் மகிழும் அஜித் – ஷாலினி; வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…

14 hours ago

“சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை” – மனம் திறந்த நடிகை சமந்தா!

திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…

14 hours ago

‘சீயான் 63’ திரைப்படத்தில் இணைந்தார் சம்யுக்தா ஹெக்டே!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…

14 hours ago

அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் விஜய்!

சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…

14 hours ago

இரட்டைக் குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண் – உபாசனா தம்பதி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…

14 hours ago

Love Oh Love Official Teaser

Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…

15 hours ago