தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி ,1947 ,வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் வைரலாகி உள்ளது. அதாவது கல்யாண மண்டபத்தில் இலைய எடுத்தால் எனக்கு 30 ரூபாய் கொடுப்பாங்க ஆனா இப்போ நான் 15 மண்டபங்கள் ஓபன் பண்ணி வைத்திருக்கிறேன் முடி வெட்ட காசு இல்லாம தான் முடிய வளர்த்தேன் இன்னைக்கு ஒரு சலூன் திறப்பு விழாவிலும் புகழ் வரலையா என்று கேட்கிறார்கள் இன்னைக்கு வண்டி கழுவ சொன்னாலும் நான் கண்டிப்பாக கழுவுவேன் எல்லாருமே உங்கள பத்தி தப்பா போடுற ஐநூறு கமெண்ட்க்காக வாழ்ந்தீர்கள் என்றால் அதற்கு மேலே வரும் 1500 லைக்குகளுக்கு உங்களால் போராட முடியாது என்று ஊக்கமாக பேசி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
