தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர், இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
“ஓர் மரணம் என்ன செய்யும்
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்
ஆனால் அண்ணா…
உண்மையான ஜீவன்
என் உயிர் தோழன்
என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண
காற்றில் கரைந்து விட்டாயே!
இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!
இனி என் முருகனுக்கு யார்? துணை
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?
இனி அவனுக்கு
யார்? துணை…
யார்? துணை…
யார்? துணை…”
இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல pic.twitter.com/rvnXRLXxsw
— [email protected] (@cellmurugan) April 18, 2021