தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ராஜு முருகன் தற்போது மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜு ஜப்பான் படம் குறித்து பேசி உள்ளார்.
ஜப்பான் திரைப்படம் 8 எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸுக்காக எழுதப்பட்ட கதை என்றும் அதில் நிறைய கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு ஹைப்பர் லிங்க் கதையாக தான் இருந்தது ஆனால் தயாரிப்பாளர் பிரகாஷ் சார் கதையை படித்த பின்பு இதனை படமாக எடுக்கலாமே என்று கேட்டதனால் தான் படத்துக்கான கதையை மாற்றப்பட்ட போது நான் நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை.
ஜப்பான் படம் முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான் அதை நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இது மட்டும் இல்லாமல் கார்த்தி சார் அந்த படத்தில் என்னுடைய கடைசிவரை துணை நின்றால் அந்த தயாரிப்பு நிறுவனமும் நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


