I am the enemy of remake films - Actress Manjima Mohan
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் “மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் பண்ணுகிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே” என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது: “சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நானும் ‘குயின்’ ரீமேக்கில் நடித்துள்ளேன்.
ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படம் மலையாளத்தில், தமிழ் படம் தமிழில், தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும். வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை”. இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…