Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களால் வருத்தப்பட்டுள்ளேன்.. நடிகை ஸ்ரீலீலா வேதனை..!

I am moved to tears by the reviews Actress Srileela speech

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ லீலா. குண்டூர் காரம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பல்வேறையும் கவர்ந்தது என்று சொல்லலாம்.

இது மட்டுமில்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் இவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்..

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் நான் நடிக்கும் படம் வெளியாகும் போது சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகமாக கொடுப்பார்கள். ஆரம்பத்தில் அதைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டு இருக்கு சில நேரம் கண்ணீர் விட்டு அழுதிருக்கேன் ஆனா இப்போ அப்படி இல்ல பாராட்டு விமர்சனம் எல்லாத்தையும் பழகிக்க கத்துக்கிட்டேன் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

I am moved to tears by the reviews Actress Srileela speech
I am moved to tears by the reviews Actress Srileela speech