காதலியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷன்.. வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் வியக்கவைத்து உள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் நீதிமன்றம் 2014-ல் விவாகரத்து வழங்கியது. அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஹிருத்திக்கும், சூசனும் விவாகரத்திற்கு பிறகும் நட்பாக பழகி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை சபா ஆசாத்தை ரித்திக் காதலித்து வருகிறார்.

நடிகர் அர்ஸ்லான் கோனியை சூசன் கான் காதலிக்கிறார். சபாவை சூசன் பாராட்டுவதும், அர்ஸ்லானை ஹிருத்திக் பாராட்டுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் ஹிருத்திக், சபா ஆசாத், சூசன் கான், அர்ஸ்லான் கோனி ஆகியோர் கோவாவில் ஒன்றாக பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஜோடிகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆயிரம் தான் விவாகரத்து ஆகிவிட்டாலும் இவர்கள் இந்த அளவுக்கு நட்பாக இருப்பதை பார்க்க நம்ப முடியவில்லை. ஹிருத்திக்கை கடுப்பேற்ற அர்ஸ்லான் கோனியுடன் நெருக்கம் காட்டுகிறார் சூசன். அதை பார்த்து எரிச்சல் அடைந்த ரித்திக் தன் பங்கிற்கு சபாவுடன் நெருக்கமாக இருக்கிறார். இது உண்மையான காதலாக இருந்தால் சரி. இல்லை என்றால் சபாவும், அர்ஸ்லான் கோனியும் தான் பாவம் என்கிறார்கள்.

Hrithik Attended Party with GirlFriend
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

6 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

6 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

6 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago