வெண்பாவின் அம்மாவால் கடுப்பான பாரதி.. வருத்தத்தில் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அமெரிக்காவிலிருந்து வந்த ஷர்மிலா பாரதிக்கு வெண்பாவுக்கு கல்யாணம் பற்றி பேச கடுப்பான பாரதி வெண்பாவுக்கு போன் போட்டு யார் இவர்? இங்க வந்து கல்யாணம், பத்திரிக்கைனு பேசிட்டு இருக்காங்க ஒரு எரிச்சலா இருக்கு என சத்தம் போடுகிறார். நான் யாரையும் அனுப்பல என்ன வெண்பா அதிர்ச்சி அடைகிறார். யாரு அவங்க பேரு என்ன என கேட்க ஷர்மிளா என சொன்னதாக சொன்னதும் வெண்பா பேரதிர்ச்சி அடைகிறார். அமெரிக்காவில் இருந்து வந்ததா சொன்னாங்களா எனக் கேட்க ஆமாம் என பாரதி சொன்னது சரி இரு நான் வருவேன் நேர்ல பேசிக்கலாம் என்று கிளம்பி வருகிறார். இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தேன் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அவங்க வந்துட்டாங்க இனிமே எல்லாம் மாறப்போகுது என புலம்புகிறார்.

வெண்பா ஹாஸ்பிடலுக்கு போனதும் பாரதி சத்தம் போடுகிறார். யார் அவங்க எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட மேனர்ஸ் கிடையாதா என திட்ட அவங்க என்னுடைய அம்மா என வெண்பா சொல்கிறார். இதனால் பாரதி ஷாக் ஆகிறார். அவங்க பண்ணது ரொம்ப தப்பு தான் எங்க இருக்காங்க எனக் கேட்க என்னுடைய கேபின்ல தான் இருக்காங்க என உள்ளே செல்கிறார் பாரதி. ‌‌

உள்ளே போன வெண்பா அம்மா என சொன்னதும் கண் கலங்குகிறார் ஷர்மிளா. உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிடுச்சு என கட்டித் தழுவுகிறார். பிறகு வா உட்காரு ஒரு நல்ல விஷயம் பேச தான் வந்தேன் நீயும் இருந்தா நல்லா இருக்கும் என வெண்பாவை உட்கார செல்கிறார். வீட்டுக்கு போலாம் வா என வெண்பா அழைக்க மறுக்கிறார் ஷர்மிளா. வெண்பாவை உட்கார வைத்து பத்து வருஷமா உங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

கல்யாணப் பேச்சு எடுத்தாலே பாரதியை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன். விவாகரத்து ஆகப்போகுது விவாகரத்து ஆனதும் கல்யாணம் தான் என சொல்கிறார். எப்போ கல்யாணத்தை வைச்சுக்கலாம் என கேட்க பாரதி வெறுப்பாகிறார். இங்கே என்ன நடக்குது வெண்பா என கேட்க, மா வீட்டுக்குப் போகலாம் வா அப்புறம் பேசிக்கலாம் என அழைக்கிறார் வெண்பா. கல்யாணத்தை பத்தி பேசுங்க பாரதி முகத்துல எந்த சந்தோஷமும் இல்ல அதிர்ச்சி அடைகிறார் அவர் உன்னை காதலிக்கலையா? நீ மட்டும் தான் அவரை காதலிச்சுட்டு இருக்கியா என கேட்கிறார்?

பத்து வருஷமா நான் என் கல்யாணத்தைப் பண்ணி வைக்க நினைக்கிறேன் ஆனா உங்க பேர சொல்லி தள்ளி போட்டுக்கிட்டே இருக்கான். ஒரு அம்மாவா எனக்கும் இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு ஆசை இருக்குமா இருக்காதா நீங்களே சொல்லுங்க மாப்பிள்ளை என கூறுகிறார். வீட்டுக்குப் போகலாம் அப்புறம் பாரதி கிட்ட இத பத்தி பேசலாம் என மீண்டும் வெண்பா அழைக்கிறார். சரி நீங்க யோசிச்சு நல்ல முடிவா எடு இந்த பத்திரிக்கையிலே எது ஓகேனு எனக்கு மெசேஜ் பண்ணுங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார் ஷர்மிளா. பத்திரிக்கைகளை தூக்கி வீசி கடுப்பாகிறார் பாரதி.

இந்தப் பக்கம் ஹேமாவும் லட்சுமியும் இருவருக்கும் பிடித்த கலர் பிடித்த சாப்பாடு என ஒன்றாக இருப்பதை நினைத்து ஆச்சர்யத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்னிக் சென்றடைந்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவை ஹாலில் லஷ்மி மாட்டி இருப்பதை பார்த்து எங்க வீட்லயும் இப்படி போட்டோ மாட்டி இருக்கும் என ஹேமா கூறுகிறார். பிறகு ஹேமா அப்பா இப்போ இங்க இருந்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறார். அதேபோல் லட்சுமி டாக்டர் அப்பா இங்க இருந்தா சந்தோஷமா இருக்கும் என நினைக்கிறார்.

பிறகு உள்ளே வந்த கண்ணம்மா இருவரையும் தூங்க சொல்கிறார். சீக்கிரம் வந்து கதை சொல்லுங்க என சொல்லிவிட்டு இருவரும் படுக்கைக்கு செல்கின்றனர். இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கண் கலங்குகிறார் கண்ணம்மா. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 09.04.22
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago