வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து வடிவேலு நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை இயக்குனர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

7 hours ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

10 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

11 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

14 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

14 hours ago